விவசாயிகள் பேரணி குறித்து சிவசேனா கருத்து
Posted: Mon,12 Mar 2018 04:46:08 GMT
மகாராஷ்ட்ர மாநில விவசாயிகள், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாசிக்கில் இருந்து மும்பையை நோக்கி மாபெரும் பேரணியாக கடந்த செவ்வாய் முதல் நடந்து வந்துள்ளார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் இந்த எழுச்சி குறித்து பேசியிருக்கும் சிவசேனா கட்சி தலைவர் ஆதித்யா தாக்கரே, “நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். சிவசேனாவால் இந்ததருணத்தில் என்ன செய்ய முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்.
நம்முடைய நிறம் என்ன என்பது முக்கியம் அல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள். நமது கோரிக்கைகள் ஒன்றுதான். சிவசேனா பிற கட்சிகளை போல் கிடையாது. சிவசேனா மக்களின் பிரச்சினையை கவனிக்கும்” என்று பேசியுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)