”குரங்கணி மலையேற்றம் அனுமதிபெறாமல் நடைபெற்றது”, எடப்பாடி புகார்
Posted: Mon,12 Mar 2018 04:44:21 GMT
சேலத்தில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குரங்கணி தீவிபத்து குறித்து கேட்கப்பட்டது.
அக்கேள்விக்கு பதிலளித்த அவர், “ குரங்கணி காட்டுத்தீக்கான காரணம் பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி பெற்று செல்ல வேண்டும். வரும் காலத்தில் அனுமதி பெறாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெறாமல் மலையேற்ற பயிற்சிக்கு சென்றதால்தான் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால், மலையேற அனுமதிப்பதில்லை. அரசின் அனுமதி பெற்றுச் சென்றால் தான் பாதுகாப்பு அளிக்க வசதி செய்யப்படும். காட்டுத்தீயில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற மாலையில் மதுரை செல்கிறேன். காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை, தீ அணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி மலையேறும் பயிற்சிக்கு சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)