Posted: Mon,12 Mar 2018 04:42:40 GMT
தேனி வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் காட்டுத்தீயில் கருகி உயிரழந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு தரப்பினரும் இச்சம்பவத்துக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ள குடியரசுத்துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, “ குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மலையேறச்சென்றவர்கள் தீ விபத்தில் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this