Posted: Mon,12 Mar 2018 04:40:39 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற டிடிடி தினகரன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தங்கள் அணிக்கு ஒரு பெயரும், தான் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்ட சின்னமான குக்கர் சின்னத்தையும் ஒதுக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அம்மனுவை விசாரித்த நீதிமன்றம், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், தனது அணிக்கு டிடிவி தினகரன் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஏதாவது ஒரு பெயரை ஒதுக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வரும் 15ம் தேதி மதுரை மேலூரில் புதிய கட்சியின் பெயர் அறிவிப்பு விழா நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க கூடாது என அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடிக்கப்பட்டுளது. இதன் காரணமாக டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால், தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this