Posted: Mon,12 Mar 2018 10:14:56 GMT
நாட்டை உலுக்கியுள்ள குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பலதேவ், “குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
சென்னையை சேர்ந்த 6 பேர் தவிர,. 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். டிரக்கிங் சென்ற 36 பேரில் 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 10 பேர் எவ்வித காயமும் இல்லாமல் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்கு ஏற்கனவே 2 ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட உள்ளது.
மதுரையிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 9 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this