கறிவேப்பிலை, கொத்தமல்லி என்ன செய்யும்?
Posted: Sat,03 Mar 2018 08:50:31 GMT
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் எளிய பொருட்களான கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவை எளிய பொருட்கள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் எளிய பொருட்கள் அல்ல. உடலுக்கு பல வகை சத்துக்களை வழங்கும் அரிய பொருட்களாகும். இப்பொருட்களில் அடங்கி இருக்கும் சத்துக்கள் குரித்து காண்போம்
கொத்தமல்லி இலையின் மருத்துவ குணங்கள்:
பசியைத் தூண்டுவதில் கொத்த மல்லி முக்கிய இடம் வகிக்க்றது, பித்தம். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றை குணமாக்க வல்லது. இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கும் கொத்த மல்லி இரத்த அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு ஆகியவற்றிற்கு அருமருந்தாகும்
மன அழுத்தத்தை குறைத்து. மன அமைதி, தூக்கம் கொடுக்கும் கொத்தமல்லி வாய் நாற்றம், ஈறு வீக்கம், ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு ஆகியவற்றை போக்கும்
கறிவேப்பிலையின் மருத்து குணங்கள்:
பேதி, சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல் கோளாறுகள் போன்ற நோய்களை குணமாக்கும் கறிவேப்பிலை, பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை பயன்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வர இள நரை நீங்கும்
  • Share
  • 0 Comment(s)