Posted: Sat,03 Mar 2018 07:59:44 GMT
தங்கம் விலை சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி (3.3.18) தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 ம், கிராமுக்கு ரூ.18 ம் அதிகரித்துள்ளது.
இன்றைய காலை வர்த்தக நேர நிலவரப்படி சென்னையில், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2922 ஆக விற்பனை ஆனது. 24 காரட் தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ.31,250 ஆகவும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.23,376 ஆகவும் இருந்து வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.41.60 ஆக உள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this