Posted: Thu,01 Mar 2018 05:38:18 GMT
ஆசிய பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்திய பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. அதிகபட்ச நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
10,500 புள்ளிகளுக்கும் நிப்டி சரிவடைந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிந்து 34,046.94 புள்ளிகளாகவும், நிப்டி 34.50 புள்ளிகள் சரிந்து 10,458.40 புள்ளிகளாகவும் இருந்தது.
கோல் இந்தியா, இன்டஸ்இண்ட் வங்கி, பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ ஆகிய வங்கித்துறை பங்குகள் சரிவடைந்ததும் பங்குச்சந்தைகளின் இன்றைய சரிவிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
  • 0 Comment(s)
Be the first person to like this