ஏர்செல் மூடப்படுமா?
Posted: Wed,28 Feb 2018 11:50:09 GMT
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர்செல் கைபேசி சேவை முடங்கிய நிலையில் சில நாட்களுகுப்பின் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் மீண்டும் ஏர்செல் சேவை முடங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது மீண்டும் ஏர்செல் சேவையில் பாதிப்பு ஏற்படலாம் ஏர்செல் சிம் மட்டும் வைத்திருப்பவர்கள், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு ஏர்செல் சிம்மை உபயோகிப்பவர்கள் வேறு நெட்ஒர்க்கிற்கு மாற்றிக்கொள்வது நல்லது. முடிந்தவரையில் எங்கள் சேவையை தொடர நங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரூ.15 .5 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டதால் ஏர்செல் நிறுவனத்தை திவால் என அறிவிக்க கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஏர்செல் சார்பில் மனு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • Share
  • 0 Comment(s)