டிசம்பரை விட ஜனவரியில் ஜி.எஸ்.டி வசூல் குறைவு
Posted: Tue,27 Feb 2018 04:06:44 GMT
ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் வசூலாகும் ஜி.எஸ்.டி வரி குறித்த விவரத்தை நிதி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வசூலன ஜிஎஸ்டி வரி குறித்த அறிவிப்பில் ரூ.86 ஆயிரத்து 703 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2018 ஜனவரி மாதத்துக்கான ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.86 ஆயிரத்து 318 கோடி வசூலாகியுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட ரூ.385 கோடி குறைவாகும்.
  • Share
  • 0 Comment(s)