”கமல்ஹாசன் ஒரு பண்பாளார்”, டி.ராஜேந்தர் பேச்சு
Posted: Sat,24 Feb 2018 05:54:30 GMT
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, கமல்ஹாசன் தன்னிடம் தொலைபேசியில் பேசியது குறித்து குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய அவர், “ நடிகர் கமல் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், ராமேஸ்வரம் செல்வதாகவும் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தார்.
நீண்ட நேரம் கமல் என்னிடம் தொலைபேசியில் பேசினார், நேரில் சந்திக்க விரும்புவதாக சொன்னார். ஆனால் குறுகிய காலம் மட்டுமே இருந்ததால் மதுரை கூட்டத்தை முடித்துவிட்டு வந்து சந்திப்பதாக சொன்னார். அவருக்கும் எனக்கு கொள்கை ரீதியாக பல முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் அவரிடம் நல்ல பண்பாடு இருக்கிறது.
கட்சி தொடங்கும் போது கமல் என்னிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. என்னை மதித்து பேச வேண்டும், சந்திக்க வேண்டும் என்று கமல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் அப்படி சொன்னார் என்றால் அது தான் அவருடைய பண்பாட்டின் வெளிப்பாடு” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)