தங்கை குழந்தையை கொஞ்சும் காஜல் அகர்வால்
Posted: Sat,24 Feb 2018 05:52:39 GMT
காஜல் அகர்வால் திரைப்படங்களில் அறிமுகமானதை தொடர்ந்து அவரைய தங்க நிஷா அகர்வாலும் 2010 ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். தமிழ். தெலுங்கு, மலையாளம் என ஒரு சில படங்களில் நடித்த இவர், பெரிய அளவில் நட்சத்திரமாக வெற்றி பெறாத நிலையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகினார்.
இந்நிலையில் நிஷா அகர்வாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு இஷான் வலேச்சா என்று பெயரிட்டுள்ளனர். தன் தங்கைக்கு குழந்தை பிறந்துள்ள செய்தியை ட்விட்டரில் தெரிவித்திருக்கும் காஜல் அகர்வால், அக்குழந்தையை தான் கொஞ்சும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)