Posted: Sat,24 Feb 2018 05:51:58 GMT
மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில், பிருத்விராஜ் நடிப்பில் தயாராகவிருக்கும் படம் ‘ஆடு ஜீவிதம்’. அரபு நாடுகளில் வேலைக்கு சென்று, பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் இளைஞர்களின் பரிதாப வாழ்க்கையை சொல்லும் படமாக தயராகிறது இப்படம்.
இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் நாயகியாக, பிருத்விராஜின் மனைவி பாத்திரத்தில் அமபா பால் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க அமலா பாலை தேர்ந்தெடுத்தது குறித்து கூறியிருக்கும் இயக்குனர் பிளஸ்சி, “அமலாபால் தான் எனது ‘சைனு’ கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார். அவரால் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும்.
துரதிர்ஷ்டவசமாக மலையாளத்தில் ’மிலி’ படம் தவிர மற்ற படங்களில் எல்லாம் அவரது திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். மேலும் அவரது திறமைக்கு தீனிபோடும் கேரக்டர்களையும் யாரும் கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this