கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல
Posted: Sat,24 Feb 2018 05:51:08 GMT
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகிவரும் படம் காலா. கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் குறு முன்னோட்டம் மார்ச் 10ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், மார்ச் 1ம் தேதி இப்படத்தின் குறுமுன்னோட்டம் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த காலா படத்தின் மார்ச் 1 அன்று வெளியிடப்பட உள்ளது. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் காண அனைவரும் தயாராகுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், காலா படத்தில் ரஜின் பேசும் பஞ்ச் வனமான, “ இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! ” என்ற வசனத்தையும் பகிர்ந்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)