பழசை மறந்த ஒபிஎஸ்
Posted: Sat,24 Feb 2018 05:43:34 GMT
இன்று நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “இந்த அதிமுக ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா; கட்சியை நடத்துவது தொண்டர்கள். அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்.
ஒரு விரல் எம்ஜிஆர், மறு விரல் ஜெயலலிதா என வாழ்ந்து வருகிறோம்; அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
மக்களை நாங்கள் காப்பாற்ற போகிறோம் என்பவர்கள் பேச்சு விரைவில் புஸ்வாணமாகிவிடும் என கூறினார். மக்களை காப்பாற்றும் ரட்சகர்கள் போல் ஒருசிலர் வீர வசனம் பேசுகிறார்கள்.
ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். அதிமுகவை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கிக் கிடக்கின்றன. அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்கத் தொடங்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
அரிதாரம் பூசிய பலூன்க என்று கட்சி ஆரம்பித்திருக்கும் கமல்ஹாசன் மற்றும் கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினி ஆகியோரை குறிப்பிட்டு பேசியுள்ளார் ஒபிஎஸ். அதிமுகவை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் மற்றும் வழிநடத்திய ஜெயலலிதா ஆகிய இருவருமே நடிகர்கள்தான் என்பதை மறந்துவிட்டு இவ்வாறு பேசியுள்ளார் ஒபிஎஸ்.
  • Share
  • 0 Comment(s)