”யாரும் தொட்டு பார்க்க முடியாது”, சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
Posted: Sat,24 Feb 2018 05:42:58 GMT
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ஜெயலலிதா இயக்கத்தை கட்டிக்காத்து நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார்கள். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பிரிந்திருந்த அதிமுகவை ஒன்றிணைத்தார் ஜெயலலிதா.
இந்தியாவிலேயே ஒரு கட்டுப்பாட்டோடு உள்ள இயக்கம் அதிமுக என்பதை ஜெயலலிதா நிரூபித்தார்.இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக கட்சியை வழி நடத்திய ஒரே தலைவர் ஜெயலலிதா தான்
ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)