சிபிஐ விசாரணையை எதிர்த்து ப.சிதம்பரம் வழக்கு
Posted: Sat,24 Feb 2018 05:41:22 GMT
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்ட விரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனக்கு சொந்தமான இடங்களில் விசாரணை என்ற பெயரில் நடைபெறும் அத்து மீறல்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அம்மனுவில் , “சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையினரும் அடிக்கடி சோதனை நடத்துகிறார்கள். கண்ணியத்தை குலைக்கும் வகையில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது.
கண்ணியத்தை கெடுக்கும் வகையில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வேட்டையாடுகிறது. இது அரசியல் பழிவாங்கும் முயற்சியாகும். அடிக்கடி சோதனை, தேவையில்லாத விசாரணை, சட்ட விரோதமான முடக்கம், தவறான தகவல்களை வெளியிடுதல் போன்ற மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. இதில் இருந்து எனது தனி உரிமையும், கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Share
  • 0 Comment(s)