”மனசாட்சி இல்லாத மிருகங்கள்”, கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Posted: Sat,24 Feb 2018 05:39:52 GMT
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அதிமுக தலையமையத்தில் அவருடைய முழு உருவ வெங்கல சிலை நிறுவப்பட்டது.
அச்சிலை ஜெயலலிதா போலவே இல்லை என சமூக வலைத்தளங்களில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், தினகரன் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், தற்போது நிறுவப்பட்டிருக்கும் சிலை ஜெயலலிதா போல் இல்லை என்றும் வளர்மதி போல் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதா சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுவதா?. அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் சிலை தான் என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் ஏற்கின்றனர். மனசாட்சி இல்லாத மிருகங்கள் தான் ஜெயலலிதாவின் புதிய சிலையை விமர்சிக்கும்” என்று கோவப்பட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)