பாகிஸ்தானுக்கு நெருக்கடி
Posted: Sat,24 Feb 2018 08:58:02 GMT
பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலயில், ஃப்ரான்ச் தலைநகர் பாரீசில் நடைபெற்ற சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழு கூட்டத்தில், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து, தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா, “பாகிஸ்தான் உடனான உறவை பாதுகாக்க, எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. இந்த முடிவு எடுக்கப் பட்டதற்கு, பாகிஸ்தானின் பொறுப்பற்ற செயலே காரணம்.
கடந்த ஆகஸ்டில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்த தெற்காசிய கொள்கை திட்டத்தில், பயங்கரவாதத்தை ஒடுக்க, பாகிஸ்தான் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறி இருந்தார். ஆனால், பாக்., எடுத்த நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் திருப்தி அடையவில்லை” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)