காணொளி மூலம் அழைப்பு விடுக்கும் கமல்ஹாசன்
Posted: Sat,24 Feb 2018 08:55:35 GMT
மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், விரைவில் தமிழ்நாட் முழுவாதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். மதுரையை தொடர்ந்து திருச்சியில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அக்காணொளியில் பேசியிருக்கும் அவர், “நீங்கள் தமிழ்நாட்டில் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறீர்கள் என்றால் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம். நாட்டு நடப்பும், அரசியலும் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பினால் இந்த வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல புறப்படுங்க என்று கூறிவிட்டு சில நொடிகள் தன் கடிகாரத்தை பார்க்கிறார். பின்னர் வாவ் இன்னும் இருக்கிறீர்களா, அப்படியென்றால் நீங்கள் நம்ம கட்சி, அங்க என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், களத்திற்கு வாங்க” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளார்.
கமல்ஹாசன் பேசியிருக்கும் இக்காணொளி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
  • Share
  • 0 Comment(s)