”மோசடி விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை”, மோடி உறுதி
Posted: Sat,24 Feb 2018 08:53:53 GMT
டெல்லியில் நடைபெற்ற குளோபல் வர்த்தக மாநாட்டில் பேசிய மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த பண மோசடி விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இது குறித்து தன் உரையில் குறிப்பிட்ட மோடி, “பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிதி முறைகேடுகளுக்கு எதிராக அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. நிதி நிறுவனங்களில் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் வகுக்கக்கூடிய இடத்தில் இருப்போர் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்ய வேண்டும்.
தங்களது வேலையில் உள்ள நெறிமுறைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல் நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் உள்ளவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் நிதி மோசடிகளை தடுக்கமுடியும் ” என்று தெரிவித்துள்ளார்
  • Share
  • 0 Comment(s)