Posted: Sat,24 Feb 2018 08:52:54 GMT
ஆளும் அதிமுக தரப்பில் இருந்து தினகரன் அணியை நோக்கி சென்றுள்ளார் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு. இந்நிலையில் மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அணியை நோக்கி வருவார்கள் என்று தெரிவித்துள்ளார் தினகரன்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ஆட்சி கவிழக்கூடாது என்பதற்காகவே பல எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர், சில அமைச்சர்களை மக்கள் விரும்பவில்லை
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவைப் போல பல எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அதிமுக எங்கள் கட்சி, அந்த 6 பேரைத்தவிர வேறு யார் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்.
நான் முதல்வராக விரும்பவில்லை. அந்த ஆசையும் எனக்கு இல்லை. எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் எம்எல்ஏவாக மட்டுமே இருப்பேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் மேலும் பல எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வர தயாராகவே இருக்கின்றனர். அவர்கள் வந்தால் இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this