Posted: Fri,23 Feb 2018 04:19:27 GMT
ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஏமிஜாக்சன். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் நடித்து வரும் இவர் தற்போது ரஜினிக்கு ஜோடியாக சங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். சல்மான் கான் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்
இவ்வாறு பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கும் போதே, திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளாராம் ஏமி ஜாக்சன். நீண்ட நாட்களாக காதலித்து வரும் ஜார்ஜ் என்பவருடன் விரைவில் ஏமி ஜாக்சனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
கடந்த மே மாதமே இவர்கள் திருமணம் நடைபெறும் என செய்திகள் வெளியானது, ஆனால் சில காரணங்களால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் லண்டனில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிக்கும் யோசனையில் இருக்கிறாராம் ஏமி ஜாக்சன்.
  • 0 Comment(s)
Be the first person to like this