தீபிகா படுகோன் தொடங்கியிருக்கும் அறக்கட்டளை
Posted: Fri,23 Feb 2018 04:18:50 GMT
நடிகை தீபிகா படுகோன் ரன்பீர் கபூர் இருவரும் தீவிரமாக காதலித்து, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இப்பிரிவு தன்னை கடும் மன உளைச்சளுக்கு ஆளாக்கியதாகவும், அதற்காக சிகிச்சைகள் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் தீபிகா படுகோன்.
இது குறித்து ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தீபிகா படுகோன், “மன அழுத்தம் நாட்டை பிடித்து இருக்கும் தொற்று வியாதி. முன்பை விட உலகம் முழுவதும் அதிகமாக இது பரவி வருகிறது. 3 பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. எல்லோருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த மன அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அனுபவிக்கின்றனர். மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் சராசரி வாழ்வுக்கு திரும்பலாம்.
2014-ம் ஆண்டில் நானும் இதனால் பாதிக்கப்பட்டேன். வெற்றி தோல்விகள் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேச மாட்டார்கள். எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களை நெருங்கி கவனிக்க வேண்டும். கஷ்டத்தை தங்களிடம் சொல்லும் உரிமையை பெற்றோர்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்களிலும் மனஅழுத்தத்தால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மனோதத்துவ நிபுணர்களை வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். எனது அம்மாவிடம் பிரச்சினைகளை நான் ஒளிவுமறைவு இல்லாமல் பேசுவேன். அதனால் காதல் தோல்வி காரணமாக நான் மன அழுத்தத்தில் இருந்தபோது டாக்டர்களை வைத்து சிகிச்சை அளித்து மருந்துகள் கொடுத்து அந்த பாதிப்பில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்தார்.
என்னைப்போல் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக அறக்கட்டளை ஒன்றை தொடங்கி மன அழுத்தத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்து உதவி வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)