கமல்ஹாசன், ரஜினிக்கு ஆதரவாக ஒரு குரல்
Posted: Fri,23 Feb 2018 04:18:06 GMT
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், கலை இயக்குனரும், அனேகன், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் பாத்திரட்தில் நடித்தவருமான கிரண், நடிகர்கள் அரசியலுக்கு வருவற்கு ஆதரவு தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கட்டுரையில், “ரஜினி / கமல் என்ன செய்தார்கள் என்று கேட்பவர்களிடம் ஒன்று கேட்டுகிறேன்.. இத்தனை வருடங்கள் நீங்கள் நம்பி ஓட்டு போட்ட தலைவர்கள் அப்படி என்ன நீங்கள் எல்லாம் சந்தோஷமாக வாழ வழி செய்துவிட்டார்கள்.? உங்களை ஆட்சி செய்யும் பொறுப்பு கொடுத்த அவர்களிடம் கேட்காமல் இவர்களிடம் கேட்டால்? என்ன நியாயம்.?
மீத்தேனை மீட்டார்களா.? ஜல்லிக்கட்டுக்கு வரிந்துகட்டி வந்தார்களா.? காவிரியை கரை புரண்டு ஒட செய்தார்களா.? இல்லை
அடிப்படைகளை வசதிகளை தான் செய்தார்களா.? இலவசங்களால் பிச்சை எடுக்கப் பழக்கினார்கள்.! குடிமகன்களை குடிகாரர்களாக ஆக்கினார்கள்! ஓட்டுரிமை விற்க வைத்து, அடிமையாக்கினார்கள்..! அவர்களிடம் கேட்காமல்.. இவர்களிடம் கேட்டால்.?
நடிகர்களாக உழைத்தார்கள்.. அவர்களால் முடிந்த உதவிகளை செய்து தான் வந்தார்கள்.
ஏன்? விஜயகாந்த் எத்தனை உதவிகள் செய்துயிருக்கிறார்.. நான் அவரைப் பார்த்திருக்கிறேன், மிகவும் நல்லவர் அவரையும் இப்படி கேட்டு காமெடி செய்து சிரித்தோம்.. அதனால் இன்று சிரிப்பது நமது தமிழகம்தான்.. சில டம்மிகள் நம்மை ஆள்வதால்.!
நீங்கள் 150 ரூபாய் கொடுத்து படம் மட்டுமே பார்ப்பதால் அவர்கள் உங்களுக்கு அனைத்தையும் செய்யவேண்டும் என்றால்.? நீங்கள் ஓட்டு போட்டவர்கள் எவ்வளவு செய்யவேண்டும்.? இல்லை குறைந்தபட்சமாக 10000 சம்பாதிக்கும் எத்தனை பேர் மாதத்திற்கு 100 ரூபாயை எடுத்து தானம் செய்கிறீர்கள்.?
அப்படி செய்தாலே நிறைய பிரச்சினைகள் குறையுமே.? நீங்கள் செய்ய மாட்டீர்கள்.? ஆனால் மற்றவர்கள் செய்யவேண்டும்.! உங்களுக்கு வந்த ரத்தம்.. மத்தவங்களுக்கு தக்காளி சட்டினி போல.? என்ன ஒரு சிந்தனை.?
ஊரில் இருக்கும் அனைத்தையும் தனக்காக ஆக்கிய திராவிடத்தை விட.. முதல்வர் மரணத்தையும் மர்மம் ஆக்கியவர்களை விட...
கார் டயர்/ ஹெலிகாப்டரை வணங்கியவர்களை விட... ஜாதிகளை / மொழியை வைத்து நமக்குள் பிரிவுளை ஏற்படுத்துவர்களை விட..நிச்சயம் இவர்கள் மோசமானவர்களாக இருக்க மாட்டார்கள்.. என நம்புகிறேன்.!
ஒருவேளை அப்படியே இருந்தாலும் ஒரு முயற்சி நாம் செய்தோம் என்று நாம் நிம்மதி அடையலாம்.! மாற்றத்தை எதிர் நோக்கவில்லை என்றால்.? திருடர்கள் மாற மாட்டார்கள்.! நடிகனுக்கு என்ன அரசியல் தெரியும்..? இல்லை இந்திய அரசியலை கரைத்து குடித்தவர்கள், அப்படி கிழித்துவிட்டார்கள்..? சொல்லுங்கள்..! மாற்றம் ஒன்றே..! மகத்தானது..!” என்று எழுதியுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)