சன்னி லியானின் இலக்கு என்ன?
Posted: Fri,23 Feb 2018 04:17:29 GMT
உலக அளவில் புகழ் பெற்ற சன்னி லியான், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது தமிழில் வீரம்மா தேவி உள்ளிட்ட பல தென்னிந்தியப்படங்களில் நடித்து வருகிறார்.
வீரம்மாதேவி படத்தில் நடிப்பது குறித்து ஒரு பத்திரிக்கை பேட்டியில் தெரிவித்திருக்கும் சன்னி லியான், “நான் எப்போதும் செய்யவிரும்பியதாக 'வீரம்மாதேவி' கதாபாத்திரம் இருக்கிறது. நான் இக் கதாபாத்திரத்தோடு மிகவும் ஒன்றிவிட்டது ஆச்சரியமான ஒன்று. இப்படத்தில் நடிக்கும் அனுபவங்கள் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அப்பாலும் உற்சாகத்தோடு இருக்க வைத்திருக்கிறது. இப்படத்தின் முக்கியமான காட்சிகளுக்காக இந்தியாவிலும் லாஸ் ஏஞ்சல்ஸ்ஸிலும் குதிரை சவாரி பயின்று வருகிறேன். அதுமட்டுமின்றி தமிழை முறையாகப் பயிலவும் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கேற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற மொழிப்படங்களில் நடிப்பது குறித்து தெரிவித்திருக்கும் அவர், “ இந்தி மற்றும் படங்கள் தென்னிந்தியப் படங்கள் மட்டும்தான் எனது இலக்கு என்று சொல்வதற்கில்லை. மற்ற பிராந்திய மொழிகளிலும் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். முக்கியமாக என்னை அணுகுவதற்கான கதாப்பாத்திரங்கள் எனக்குப் பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். அப்படியெனில் நிச்சயமாக நான் மற்ற மொழிப் படங்களிலும் நடிப்பேன்.
  • Share
  • 0 Comment(s)