Posted: Fri,23 Feb 2018 03:33:16 GMT
தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற 20-20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய அணித்தலைவர் கோஹ்லி, “இந்திய அணி பேட்டிங்கின் போது, துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால், 175 ரன்கள் வரை எடுக்க முடியும் என எண்ணினேன்.
பின், மணிஷ் பாண்டே, ரெய்னா இணைந்து சற்று உதவினர். அடுத்து தோனி, மணிஷ் பாண்டே ஜோடி சிறப்பாக செயல்பட்டது. இதனால், இந்திய அணியின் ஸ்கோர் 188 ரன்கள் என்ற நிலையை அடைந்தது. இது வெற்றிக்கு போதுமானது என நினைத்தேன். இதன்படி, முதல் 12 ஓவர் வரை எங்களுக்கு சாதகமாகத்தான் போட்டி இருந்தது. ஆனால், அடுத்து வானிலை மாறியது.
இடைவிடாமல் தொடர்ந்து லேசான துாறல் விழுந்து கொண்டிருந்தது. இதனால், இந்திய பவுலர்களுக்கு தொல்லை ஏற்பட்டது. பந்தை நன்றாக பிடித்து பவுலிங் செய்வது கடினமாக இருந்தது. இது, பவுலர்களுக்கு பாதகமாக அமைந்துவிட்டது . இதற்காக, போட்டியை நிறுத்த வேண்டும் என நாங்கள் எண்ணவில்லை. தொடர்ந்து போட்டியை விளையாடவே விரும்பினோம். அதேநேரம், இடைவிடாத துாறல், பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. அனைத்து பாராட்டுகளும் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுமினி, கிளாசனைத் தான் சேரும். இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெ ளிப்படுத்தி, வெற்றியை பறித்து விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this