Posted: Fri,23 Feb 2018 12:46:11 GMT
ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயராகிவரும் காலா படத்தை தனுஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹியூமா குரோஷி நாயகியாக நடிக்க, நானா பட்டேகர், சமுத்திர கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பொதுவாக ஏப்ரல் மாதம் வெளியாகும் பெரிய நடிகர்கள் படம், தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்றுதான் வெளியாகும். ஆனால் மற்றாக காலா படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகிறது.
இதற்கு காரணம் ஏப்ரல் 27, 28, 29 தேதிகளை தொடர்ந்து மே1 தொழிலாளர் தினம் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்திருப்பதுதான்.
  • 0 Comment(s)
Be the first person to like this