”ஆளுனர் மாளிகை கதவு திறந்தே இருக்கும்”, ஆளுனர் பேச்சு
Posted: Fri,23 Feb 2018 11:43:49 GMT
சென்னையில் வாழும் ஜெயின் சமூகத்தினர் நடத்திய தொழில் தொடர்பான கருத்தரங்கில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் பேசிய புரோகித், “அப்போது, தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் துவங்கும் சூழ்நிலை அமைந்துள்ளது. இதனால், தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழில் முனைவோருக்காக ஆளுநர் மாளிகையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்” என்று தெரிவித்தார்
மேலும், “ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நல்ல நட்பில் இருப்பதால் தொழில் முனைவோருக்கு உதவ எளிதாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Share
  • 0 Comment(s)