Posted: Thu,22 Feb 2018 04:38:08 GMT
இன்று முழுவதும் இந்திய பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. பல நிறுவனங்களின் காலாண்டு லாபம் சரிவடைந்துள்ளதாக அறிவித்தது, சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்கு சந்தை சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 25.36 புள்ளிகள் சரிந்து 33,819.50 புள்ளிகளாகவும், நிப்டி 14.75 புள்ளிகள் சரிந்து 10,382.70 புள்ளிகளாகவும் உள்ளன. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 10,400 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்துள்ளது. இச்சரிவு பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this