ஏர்செல்லில் என்ன பிரச்சினை?
Posted: Thu,22 Feb 2018 03:18:23 GMT
ஏர்செல் நிறுவனம் கடந்த இரண்டு நாட்களாக முடங்கிக் கிடக்கிறது. பலரும் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு நிறுவனங்களின் சேவையை பெற குறுச்செய்தி அனுப்பிவிட்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கே ரொம்ப அதிர்ச்சி தரக்கூடிய தகவல். எந்த கம்பெனியுடன் நாங்கள் டவர் ஒப்பந்தம் செய்துள்ளோமோ அவர்களுடனான சட்ட போராட்டம்தான் காரணம். முன் அறிவிப்பின்றி அவர்கள் நிறைய டவர்களை ஷட்-டவுன் செய்துவிட்டார்கள் என்பதே இந்த பிரச்சினைக்கு காரணம்.
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இன்னும் மூன்று நாட்களில் நெட்வொர்க் பிரச்சினை சரியாகும். பிரச்சினைகள் புரிந்து வைத்துள்ளோம். பல பத்திரிகையாளர்களிடம் விவரங்களை தெரிவித்து வருகிறோம். இன்றும்கூட எங்கள் நெட்வொர்க் வேண்டும் என காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி. அவர்கள் எங்களை புரிந்து வைத்துள்ளனர். சேவையை புதுப்பிக்கவில்லை என்பது தவறான தகவல். போதிய அலைக்கற்றையை ஏலத்தில் வாங்கி வைத்துள்ளோம். அடுத்த 15 வருடங்களுக்கு சேவை கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. எங்கள் கம்பெனி நிதி நெருக்கடியில் உள்ளது. அதை சமாளிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். இந்த நிலையில் திவால் ஆவோம் என்று கூறுவது பொய். தொழில்போட்டிதான் ஏர்செல்லின் இந்த நிலைக்கு காரணம். பல செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களும், அடக்க விலைக்கு கீழே வியாபாரம் செய்வதால் எல்லா கம்பெனிகளின் நிகர லாபமும் குறைந்துவிட்டது. எனவேதான் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)