Posted: Mon,19 Feb 2018 05:50:07 GMT
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றியதையடுத்து, 20-20 தொடரின் முதல் ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட 20-20 போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் பூவா தலையா வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது.
20-20 போட்டிகளை பொறுத்தவரை இது அதிகபட்ச இலக்கு என்ற நிலையில், அடுத்ததாக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 20-20 முதல் நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
  • 0 Comment(s)
Be the first person to like this