ஏமிக்கு அடித்த அதிர்ஷ்டம்
Posted: Wed,14 Feb 2018 06:15:51 GMT
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகிவரும் படம் 2.0. இப்படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்து வருவதால் தனக்கு பல பட வாய்ப்புகள் வரும் என்று நினைத்திருந்த ஏமி ஜாக்சனுகு ஏமாற்றமே மிஞ்சியது.
இதன் காரணமாக அமெரிக்காவில் வெளியாகும் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். முழுமையாக அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிடலாம் என்ற யோசனையில் இருந்த ஏமி ஜாச்னனுக்கு சல்மான்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
சல்மான் கான் நடிக்கும் கிக் 2 வில் நாயகியாக நடிப்பதாக இருந்த ஜாக்குலின் விலகிவிட அதற்கு பதிலாக அப்படத்தில் நடிக்க ஏமிஜாக்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக இந்திய திரையுலகில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் ஏமி.
  • Share
  • 0 Comment(s)