கிசு கிசுவை உண்மையாக்கிய ரகுல் ப்ரீத் சிங்
Posted: Wed,14 Feb 2018 06:13:04 GMT
நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பாகுபலி வில்லன் நடிகர் ராணா இடையே காதல் என்று ஏற்கனவே கிசு கிசு வந்து கொண்டிருக்கும் நிலையில், ரகுல் ப்ரீத் சிங் ஒரு பத்திரிக்கை பேட்டியில் தன் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பது, கிசு கிசுக்களை உண்மையாக்குவது போல் உள்ளது.
அப்பேட்டியில், “ என் வருங்கால கணவர் கட்டாயமாக ஆறடி உயரம் இருக்க வேண்டும். ஒரு இன்ச் குறைந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ராணா 6 அடி 2 அங்குலம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரியும் என்ற நிலையில், தான் ராணாவைத்தான் காதலிக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ரகுல் என்றே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
  • Share
  • 0 Comment(s)