அனுஷ்கா ஒரு குழந்தை
Posted: Wed,14 Feb 2018 06:11:38 GMT
அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்களில் வாளெடுத்து சுழற்றிய நடிகை அனுஷ்கா, நாயகிகளுக்கு முக்கியத்துவம் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். எவ்வளவு முக்கியமான பாத்திரத்தில் நடித்தாலும் சொந்த குரலில் பேசுவதில்லை அனுஷ்கா. அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்திருக்கும் அனுஷ்கா, “நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்து வருகிறது. ஆனால், எனது தோற்றத்தை விட எனது குரல் சின்னப்பெண் பேசுவது போன்று இருக்கும்.
எனது வீட்டில் இருப்பவர்கள்கூட குழந்தை பேசுவது போல் இருப்பதாக கிண்டல் செய்வார்கள். அதோடு, நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு கம்பீரமான குரல் தேவை. அந்த வேடங்களுக்கு குழந்தைத்தனமாக பேசினால் காமெடியாக இருக்கும். கேரக்டரும் ஒர்க்அவுட் ஆகாது.
அதனால் தான் டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தபோதும், டப்பிங் பேச வேண்டும் என்று டைரக்டர்களிடம் நான் கேட்டதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)