துப்பாக்கியால் சுடும் ப்ரியா வாரியார்
Posted: Wed,14 Feb 2018 06:09:52 GMT
சில நாட்களுக்கு முன்பு வெளியான அரை நிமிட ஒற்றை காணொளியால் ப்ரியா வாரியாரை அனைவரும் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு மற்றொரு காணொளியை வெளியிட்டு, இளைஞர்களை கதறவிட்டுள்ளது ‘ஒரு அடார் லவ்’ படக்குழு.
காதலர் தினத்தை முன்னிட்டு மற்றொரு குறுமுன்னோட்டத்தை 'ஒரு அடார் லவ்' பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இக்குறு முன்னோட்டத்தில் ப்ரியா வாரியர் தன் கையை துப்பாக்கி போல வைத்துக்கொண்டு முத்தத்தை அதில் நிரப்பி காதலரைப் பார்த்துச் சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
இம்முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
  • Share
  • 0 Comment(s)