தேசிய கட்சிகளின் அரசியல் நாடகங்கள்
Posted: Wed,14 Feb 2018 05:46:12 GMT
முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரை மானியத்தை நீக்கியுள்ள பாஜக அரசு, நாகலாந்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம் செல்லும் முழு செலவையும் ஏற்கும் என அறிவித்துள்ளது.
நாகலாந்து சட்டமன்ற தேர்தலை ஒட்டி, பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி, அளித்த தேர்தல் வாக்குறுதியில், ”நாகாலாந்தில் ஆட்சிக்கு வந்தால், கிறிஸ்தவர்கள் ஜெருசலேத்துக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள மானியம் அளிப்போம்” என்று தெரிவித்திருந்தது.
ஆனால் பாஜகவோ ஒரு படி மேலே போய் இலவசமாக அழைத்துச்செல்வோம் என தெரிவித்துள்ளது. இது குறித்து நாகாலாந்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஜேம்ஸ் விஜோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மூத்த குடிமக்களை ஏசுவின் பிறந்த இடமான ஜெருசலேத்துக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டம் வைத்து இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)