2979 கோடி செலவில் படேல் சிலை
Posted: Wed,14 Feb 2018 05:43:17 GMT
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உலகிலேயே மிகப்பெரிய இரும்பு சிலை சர்தார் வல்லபாய் படேலுக்கு நிறுவப்பட உள்ளது. 2,979 கோடி செலவில் உருவக்கப்பட்டு வரும் இச்சிலை 182 மீட்டர் உயரம் கொண்டதாகும். இச்சிலை வல்லபாய் படேலின் பிறந்த நளான அக்டோபர் 31 அன்று நிறுவப்பட்ட உள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள குஜராத் மாநில முதன்மை செயலாளர் ஜெ என் சிங், “இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் புகழைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதி ‘ஒற்றுமையின் சிலை’யாக திறக்கப்பட உள்ளது. நர்மதை நதி பாயும் சர்தார் சரோவார் அணையிலிருந்து 3.32 கிலோ மீட்டர் தொலைவில் அமையவுள்ள இச்சிலை இரும்பு மனிதனின் 138-வது பிறந்த நாளான அக்டோபர் 31ந்தேதி திறக்கப்படும்.
சிலை உருவாகும் இடத்திற்கு சென்று நடைபெறும் வேலை முறைகளை கவனித்தேன்.குறித்த நேரத்தில் இரும்பு மனிதனின் சிலை வடிவமைக்கப்பட்டு ‘ஒற்றுமையின் சிலை’யாக திறக்கப்படும். மேலும், இச்சிலையை நிறுவுவது பிரதமர் மோடியின் நீண்ட நாள் கனவாகும். சிலைக்கு அருகே படேலின் வாழ்க்கை வரலாறு,சாதனைகள் அடங்கிய தொகுப்புகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அருங்காட்சியகம் நிறுவும் திட்டமும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)