வரலாற்று சாதனைபடைத்த இந்திய அணி
Posted: Wed,14 Feb 2018 05:40:01 GMT
தென்னாப்பிரிக்காவில்சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணி, தற்போது விளையாடி வரும் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வென்றுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த 4 ஆட்டங்களில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்த இந்திய அணி, 5 ஆட்டத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றுள்ளது.
பூவா தலையா வென்ற தென்னாப்பிரிக்க அணித் தலைவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ப்பிரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணியின் முதல் ஒரு நாள் தொடர் வெற்றி இதுவாகும்.
  • Share
  • 0 Comment(s)