Posted: Wed,14 Feb 2018 12:37:47 GMT
காஷ்மீர் மாநிலம் சுன்ஜூவானில் உள்ள ராணுவ முகாமை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பு தாக்கியதில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ இந்த தாக்குதலுக்கு சரியான விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும்' என்ரு தெரிவித்திருந்தார்.
நிர்மலா சீதாராமனின் கருத்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பதாகவே இருப்பதால், பாகிஸ்தான் தரப்ப்பில் இருந்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டுளது. பாகிஸ்தான் ராணுவ அமைச்சர், குர்ராம் தஸ்தகீர் கான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைஇல், “எங்கள் எல்லையை நாங்கள் பாதுகாப்போம். இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும். ஆத்திரப்படுவதை நிறுத்த வேண்டும்.
எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும். உளவு பார்ப்பதற்கு ஆட்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.எல்லையைத் தாண்டி வந்து, 'சர்ஜிகல் ஸ்டிரைக்' போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this