Posted: Wed,14 Feb 2018 12:36:32 GMT
ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அடுத்து அக்கட்சியில் விலகினார் அக்கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ். விரைவில் புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டிருகும் அவர், அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தீவிரமாக இருக்கிறார்.
தன்னுடைய புதிய கட்சி மூலம் பாஜகவை கடுமையாக எதிர்க்க திட்டமிட்டுள்ள சரத் யாதவ், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், “ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை, மத உரிமை உண்டு. ஆனால் அதற்கு பேராபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சிறுபான்மையினர் எல்லா நிலைகளிலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகத்தான் நான் இதை பார்க்கிறேன். மொத்தத்தில் நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை ஏற்படுவதை போன்ற நிலை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்
மேலும், “வருங்காலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் மெகா கூட்டணி அமைப்பதற்கான திறமை உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
  • 0 Comment(s)
Be the first person to like this