மோகன் பகவத் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் உமா பாரதி
Posted: Wed,14 Feb 2018 12:35:04 GMT
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ராணுவம் குறித்து கூறிய கருத்துக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோகன் பகவத் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார் மத்திய அமைச்சர் உமா பாரதி.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காஷ்மீரை ஆட்சி செய்த மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில், சேக் அப்துல்லா வலியுறுத்தியும் கையெழுத்து போடவில்லை. அப்போது, காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தி முன்னேறியது. அங்கு உடனடியாக செல்வதற்கு தேவையான அதிநவீன சாதனங்கள் இந்திய ராணுவத்திடம் இல்லை. இதனால், அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர், ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் உதவியை கேட்டு ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்த கோல்வால்கருக்கு கடிதம் எழுதினார்.
ராணுவம் மீது கல்வீசப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ராணுவம் பெண்களை பலாத்காரம் செய்வதாக ஜவஹர்லால் நேரு பல்கலையில் பேசுகின்றனர். இதெல்லாம் பேச்சுசுதந்திரம். ஆனால், நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உயிர்தியாகம் செய்ய தயாராக உள்ளதாக கூறுவது மட்டும் ராணுவத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என கூறுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)