ஓவைசிக்கு ராணுவம் பதிலடி
Posted: Wed,14 Feb 2018 12:33:55 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுஞ்சுவான் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நட்டத்தியதில் காஷ்மீரை சேர்ந்த முகமது அஸ்ரப் மிர், ஹபிபுல்லா குரேஷி, மன்சர் அகமது தேவா மற்றும் முகமது இக்பால் சேக் ஆகிய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ராணுவ வீரர்களின் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, “இந்திய முஸ்லிம்களின் நாட்டுப்பற்று குறித்து கேள்வி எழுப்புபவர்களின் எண்ணம் தவறானது. காஷ்மீர் ராணுவ முகாமிப் உயிரிழந்த 7 பேரில் 5 பேர் முஸ்லிம்கள். இந்திய முஸ்லிம்களை, பாகிஸ்தானியர்கள் எனக்கூறுபவர்கள் இதிலிருந்து ஏதாவது கற்று கொள்ள வேண்டும். நாங்கள் நாட்டிற்காக வாழ்க்கையை தியாகம் செய்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
ஓவைசியின் இக்கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள வடக்கு பிராந்திய ராணுவ தளபதி தேவராஜ் அன்பு, “வீரமரணம் அடையும் வீரர்களுக்கு மதச்சாயம் பூச வேண்டாம். நாங்கள் எந்த வீரருக்கும் மதச்சாயம் பூசுவது கிடையாது. இவ்வாறு கருத்து வெளியிடுபவர்கள் ராணுவத்தை பற்றி எதுவும் தெரியாதவர்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)