இந்திய அரசியலில் எதிரொலிக்கும் பிரியா வாரியாரின் புருவ அசைவு
Posted: Wed,14 Feb 2018 12:32:43 GMT
காதலர் தினத்தை இந்து அமைப்புகள் எதிர்த்து வரும் நிலையில், காதலர் தினத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார், குஜராத்தில் பாஜகவுக்கு தண்ணி காட்டி சுயேட்சையாக வென்ற ஜிக்னேஷ் மேவானி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் சமிபத்தில் வெளியான பிரியா வாரியாரின் பாடலை மேற்கோள் காட்டி இருக்கும் அவர், “ மணிக்யா மலரயா பூவி பாடல்வைரல் ஹிட்டாகியுள்ளதே காதலர் தினத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ்க்கான பதிலடி” என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் , “ஒருவரை வெறுப்பதை விட அவரை அதிகமாக நேரிக்க வேண்டும் என்பதை இந்தியர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்” என்று தெரிவித்ததுடன் பிரியா வாரியார் புருவத்தை உயர்த்தும் புகைப்படத்தையும் தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். திரையுலகில் ஆரம்பித்து இந்திய அரசியல் வரை எதிரொலிக்கிறது பிரியா வாரியாரின் புருவம்.
  • Share
  • 0 Comment(s)