மனம் திறந்த மம்தா மோகன் தாஸ்
Posted: Wed,14 Feb 2018 06:11:07 GMT
திரையுலகில் அனுஷ்காவுக்கு பெரிய பெயர் பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது அருந்ததி என்று சொல்லலாம். இப்படமே பின்பு பல நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அனுஷ்கா நடிக்க காரணமாக அமைந்தது. ஆனால் முதலில் அருந்தி படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் அனுஷ்கா அல்ல, மம்தா மோகந்தாஸ்.
அருந்ததி படத்தில் நடிக்காதது குறித்து நீண்ட நாட்களுக்குப்பிறகு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் மம்தா. இது குறித்து கூறி இருக்கும் அவர், “சினிமாவில் அப்போது எனக்கு அதீத ஆர்வம் இல்லை.. நான் நடிக்க வந்த முதல் நான்கு வருடங்களில் கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருந்தேன். அதனால் ஏதோ படங்களில் நடித்து வந்தேனே தவிர, மிகப்பெரிய ஈடுபாடு காட்டவில்லை. அதனால் தான் அருந்ததி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தபோது கூட அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது” என்று தெரிவித்துள்ளார்.
  • Share
  • 0 Comment(s)