மூன்று நாட்களில் 40 கோடி வசூல் செய்த பேட் மேன்
Posted: Wed,14 Feb 2018 06:09:32 GMT
பெண்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்த, தமிழ்நாட்டை சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை அடிப்பட்டையாக கொண்டு பாலிவுட்டில் வெளியாகி இருக்கும் படம் ‘பேட் மேன்’.
பால்கி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியான மூன்றே நாட்களில் 40 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்தியா முழுவதும் 2750 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் 10 கோடிகள் வரை வசூல் செய்தது. அடுத்த நாட்களில் வசூல் அதிகரித்து மூன்று நாட்களில் 40 கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதிக்குள் 100 கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் மொத்த செலவு 70 கோடிகள் ஆகும்.
  • Share
  • 0 Comment(s)