சூர்யா புதிய சாதனை
Posted: Wed,14 Feb 2018 06:05:44 GMT
நடிகர் சூர்யாவை ட்விட்டரில் தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது. சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர்.
திரையுலக விளம்பரங்களுக்காக மட்டுமல்லாமல் சமூக சேவைகளுக்கும் தனுடைய ட்விட்டர் தளத்தை பயன்படுத்தி வருகிறார் சூர்யா. இதன் காரணமாக சூர்யாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 40 லட்சத்தை தாண்டி ஒரு மைல்கல்லை தொட்டுள்ளது.
சூர்யா 40 லட்சம் தொடர்பவர்களை பெற்றுள்ளதையடுத்து, #4MAnbaanaFansForSuriya எனும் ஹேஸ்டேக்கை சூர்யா ரசிகர்கள் உருவாக்கி ட்விட்டரில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள். நடிகர் விஜய்யை ட்விட்டரில் தொடர்பவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • Share
  • 0 Comment(s)