வண்டி ஓட்ட முடியாமல் தவித்த அஜீத்
Posted: Wed,14 Feb 2018 06:04:44 GMT
தமிழ் திரையுலகில் அதிவேக பந்தய கார்கள், பைக் மட்டுமல்லாமல் ஹெலிக்காப்டர் ஓட்டும் அளவுக்கு பயிற்சி பெற்றவர் அஜீத். ஆனால் அவர் ஒரு வண்டியை ஓட்ட முடியாமல் திணறிய காணொளி வெளியாகியுள்ளது. ஆனால் அது அவருடை புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
அஜீத்தின் மகள் அனொஷ்கா படிக்கும் பள்ளியின் ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட அஜீத், பெற்றோர்களுக்கான சிறப்பு பந்தயங்களில் கலந்து கொண்டார். அதில் சைகிள் டயரை குச்சியால் தட்டியபடியே ஓடும் பந்தயத்தில் தடுமாறினா. அதை பார்த்து அவரது மகள் அனொஷ்கா விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்ற எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், பள்ளியில் சைக்கிள் டயர் ஓட்டி விளையாடிய அஜீத், பெற்றோர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்.
  • Share
  • 0 Comment(s)