பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டு குடியரசுத் தலைவர்கள், மூன்று பிரதமர்கள்
Posted: Tue,13 Feb 2018 03:02:59 GMT
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் வெங்கர்ராமன் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகிய இருவரும், குடியரசுத்தலைவர் பதவிக்கு வரும் முன், நிதியமைச்சர்களாக பொறுப்பு வகித்துள்ளனர்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, ஜனவரி 1980 முதல், ஜனவரி 1982 வரை வெங்கட்ராமன் நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டதில் 2 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி 7 முறை இந்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இந்திராகாந்தி மற்றும் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலகட்டத்தில் இவர் நிதியமைச்சராக பணியாற்றினார்.
அதே போல் பிரதமர்களாக இருந்த நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இம்மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அடுத்தடுத்த தலைமுறையினர் ஆவர்.
  • Share
  • 0 Comment(s)