ஆசிரியர்களை பாராட்டிய அமைச்சர்
Posted: Tue,13 Feb 2018 03:00:53 GMT
அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் உள்ள் அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.
இவ்விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, “ மாநிலத்தில் உள்ள, 45 ஆயிரத்து, 120 பள்ளிகளில், 2.21 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில், 51 பேர் மட்டுமே, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், பணிக்கு வந்துள்ளனர்.
மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்த, இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், இந்த எண்ணிக்கை, 50 ஆயிரமாக உயர வேண்டும்.
தொடக்கப் பள்ளிகளில், 37. 81 லட்சம்மாணவர்களில், 20 ஆயிரத்து, 739 மாணவர்கள் மட்டுமே விடுப்பு எடுக்காமல், பள்ளிக்கு வந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை உயர, பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும். பள்ளிகளை ஆசிரியர்கள் நல்ல முறையில் நடத்த வேண்டும்; அதில், எங்களின் தலையீடே இருக்காது; வெளிப்படைத் தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.” என்று தெரிவித்தார்.
  • Share
  • 0 Comment(s)